பக்கம்:உணர்வின் எல்லை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கோ கூறும் 'என் கதை'

199


வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகவேன்
என்னோடும் தோழியீர் எல்லீரும் வம்மெல்லாம்

(வாழ்த்துக் காதை-19)

என்று கண்ணகியின் தெய்வமணிக்குரல் கேட்டது.

அது கேட்டே வஞ்சி மகளிரும், ஆயத்தாரும் அம்மானே வரியாலும், கந்துக வரியாலும் கண்ணகி தெய்வத்தையும் தமிழ் காட்டு மூவேந்தரையும், அமிழ்தினும் இனிய பாடல்களால் வாழ்த்தினர். அற்றை நாள் அரசர் பெருமக்களை வாழ்த்திய அவர்கள் வாழ்த்தில் இற்றைநாள் ஒற்றுமைத் தமிழகத்திற்குரிய உணர்ச்சி விதைகள் வீழ்ந்திருப்பதைக் காணும்போது, வியப்பும் மகிழ்வும் நம்மை ஆட்கொள்கின்றன. கலைச் சுவையும் வீரச் சுவையும் களி துளும்ப, வஞ்சிமகளிர் பாடிய வாழ்த்திற்கு வைரமுடி சூட்டினும் போல, பத்தினிக் கடவுள் கண்ணகியும், நீடுழி செங்குட்டுவன் வாழ்க! என்று திருவாய் மலர்த்து வாழ்த்தினாள்.

இவவாழ்த்துக் காதிையின் தொடக்கத்தில் கண்ணகியின் திருவுருவச் சிலேயை முதல் முதல் கண்டதும் தேவந்தியும் காவற் பெண்டும், அடித்தோழியும் புலம்பிய புலம்பலால், கண்ணகி, கோவலன் இறந்த செய்தி கேட்டு அவர் அன்னையர் ஆவி துறந்தனர், என்பதையும், தந்தையர் துறவு நெறிமேற்கொள்ளத் துணிந்தனர், என்பதையும் மாதவியும் துறந்தாள்; அவள் மகள் மணிமேகலையும் துறந்தான் என்பதையும், 'அடைக்கலப் பொருளை இழந்தேனே!'