பக்கம்:உணர்வின் எல்லை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

உணர்வின் எல்லை


மாடலனோடும் சேர்ந்து மாநில வேந்தர் மகிழ்ந்து போற்ற வேள்விச் சாலைக்குள் நுழைந்தான் வீர வேந்தன் செங்குட்டுவன். அப்போது அச்சேர வேந்தன் தம்பியார்-அரசு துறந்திருந்தவர்-கண்ணகி தெய்வத்திற்கு, 'நாட்டுதும் யாமோர், பாட்டுடைச் செய்யுள்' என்று காவியக் கோயில் கட்டிய கலைச் செல்வர்-இளங்கோவடிகள்-பத்தினிகோட்டத்திற்குள் அடியெடுத்து வைத்தார். அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறும் நிலையில் தான் இளங்கோ அடிகள் தம் சரிதையைத் தாமே கூறுகிறார். தம் வாழ்க்கையின் வரலாறு கண்ணகி தெய்வத்தின் திருவாயால் வெளிப்பட்ட பான்மையையும் புலப்படுத்துகிறார்.

பத்தினி கோட்டத்துள் இளங்கோ அடிகள் நுழைந்ததும், பார்ப்பனத் தோழி தேவந்தி மேல் கண்ணகி தெய்வம் எழுந்தருளிக் கவிச் செல்வரின் கதையைக் கூறியது. அது வருமாறு :

'வஞ்சிமாநகரத்தில் அரண்மனை அத்தாணி மண்டபத்தில் நின் தந்தையின் அருகே இருந்தாய் ; அப்போது உன்னை நோக்கிக் (காலத்தின் இயல்பைக் கணித்துச் சொல்லும்) கணி ஒருவன், 'அரசனாக வீற்றிருக்கும் அழகிய வடிவிலக்கணம் நின்னிடத்தே உண்டு' என்று கூறினான். அவனை நீ வெகுண்டு நோக்கினாய். அதோடு மணங் கமழும் நறிய மாலையினையும், கொடி கட்டிய தேரினையும், நால்வகைப் படையினையும் உடைய உன் அண்ணன் செங்குட்டுவன் ('அண்ணன் இருக்கத் தம்பி ஆளு-