பக்கம்:உணர்வின் எல்லை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும்-பாரதியும்

15

‘வீடு தோறும் கலையின் விளக்கம்
      வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
      நகர்க ளெங்கும் பலப்பல பள்ளி
... ... ...
... ... ...
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை

     கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.’

என்று உபதேசிக்கிறார், நம்மனோர்க்குப் பாரதியார். ‘தருமங்களில் எல்லாம் தலைசிறந்து விளங்குவது கல்வி கற்பித்தலே,’ என்று கூறுகின்றார்.

‘அன்ன யாவினும் புண்ணியங் கோடி

     ஆங்கோ ரேழைக்கு எழுத்தறி வித்தல்’

என்பது காண்க,

அறியாமை இருளைப் போக்குவதில் கண்னும் கருத்துமாயுள்ள கவிஞர், நம்மவர் உதவியையும் நாடுகிறார்; ஒவ்வொரு தமிழனும் தன்னாலியன்ற உதவியைத் தளராது- தயங்காது செய்ய வேண்டும் என்கிறார். எவ்வாற்றாலும் செயற்கரிய இச்செயலைத் தமிழர்களாகிய நாம் செய்தே தீரவேண்டுமென்று வற்புறுத்துகின்றார் :

நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
     நிதிரு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருவீர் ;
     ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர் ;
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்

     வாணி பூசைக் குரியன பேசீர்;