பக்கம்:உணர்வின் எல்லை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. ஆருயிர் மருந்து

அழகு தெய்வத்தையும் அறிவிழக்கச் செய்யும் அப்பேரழகியின் கண்களினின்றும் நீர் பெருக்கெடுத்தது. இத்தனை ஆண்டுகளாக ஒன்றும் அறியாதிருந்து, திடீரென்று, ‘கோற்றொடி மாதரொடு வேற்று நாடடைந்த’ தன் அருமைத் தந்தை வாளால் வெட்டுண்ட செய்தி கேட்க அவள் மனம் எப்படிப் பொறுக்கும்? நெஞ்சில் அனல் பொங்க, மனம் வெந்து, கண்ணீர் சிந்தினாள்.

மலர் தொடுக்கும் மண்டபத்திலிருந்த மணிமேகலையை இந்நிலையிலேதான் நமக்கு முதன் முதல் காட்டுகிறார் சாத்தனார். ஆனால், இம் முதற்காட்சிக்கும் அவள் அறவாழ்வின் முடிவுக் காட்சிக்கும் இடையிலேதான் எவ்வளவு வேறுபாடு! தந்தைக்காக விம்மி விம்மி அழுத அவள், தவக்கோலம் பூண்டு, ‘எவ்வுயிர்க்காயிலும் இரங்கி’ அன்பு சுரக்கும் காட்சியை இறுதியில் காண்கிறோம். இவ்விரு காட்சிகட்கும் இடையே உள்ள அவள் வாழ்விலே தான் எத்தனை நிகழ்ச்சிகள்! அவற்றை எல்லாம் இலக்கியமாகச் சாத்தனார் தீட்டியுள்ள சொல்லோவியங்களைக் காணும்தோறும் நாம் பெறும் உணர்ச்சிகள் எவ்வளவு ஆழமானவை!

கொடுமையுள் எல்லாம் கொடுமை பசிக் கொடுமை. அக்கொடுமையை நினைத்தாலும் நெஞ்சம்