பக்கம்:உணர்வின் எல்லை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உணர்வின் எல்லை

உயர்ந்த பெருங் கலங்கரை விளக்கமேயாகும். மணிமேகலையில், இக்கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சாத்தனார் பல உண்மைகளை உணர்த்தியுள்ளார். அவர் இயற்றிய இலக்கியத்தின் உயிர் நாடியான உண்மை , ‘மக்கள் யாக்கை உணவின் பிண்டம்’ என்பதுதான்.

இந்த எளிய—உயரிய உண்மையை அறிவின் ஆராய்ச்சியால் அறிந்த பின்னும், ஒரு சமுதாயம், தன் வாழ்க்கை நெறியில் இதைத் தலையாய சட்டமாகக் கொண்டு இதன் பயனை எல்லோரும் நுகரும் வண்ணம். வாழ்வாங்கு வாழாத காரணத்தாலேதான், காட்டில் ஏற்றத்தாழ்வுகள் தோற்றுகின்றன. அந்த ஏற்றத் தாழ்வுகளின் புறத்தோற்றமே பஞ்சமும் பட்டினியுமாகும். அப்பஞ்சமும் பட்டினியுமே பசியென்னும் கொடிய கோலங்கொண்டு, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரையே பலியாகக் கொள்கிறது. அப்பசியென்னும் பிணி உடலை அழித்து, உணர்வைப் பாழாக்கி, உயிரையும் சூறையாடுகிறது. அறிவாற்றல் படைத்த மனித சமுதாயத்தில் நிகழக்கூடாத இப் பெருங்கொடுமை தீர, மணிமேகலை அளித்த மருந்து—நல்ல மருந்து—எல்லார்க்கும் பொதுவாகிய உணவு ஒன்றுதான்.

இந்த உணவையே சாத்தனார், ‘ஆருயிர் மருந்து’ என்று குறிப்பிடுகிறார். உயிரையே காப்பாற்ற வல்ல மருந்தாகிய இவ்வுணவை உலகுக்கெல்லாம் வழங்கும் பேராற்றல் தம் கைக்கு வந்தபோதும்,