பக்கம்:உணர்வின் எல்லை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. உணர்வின் எல்லை

அழகான குளத்திலே அருமையான மலர்கள் பூத்திருக்கின்றன. பச்சிளங்குழந்தை பவளவாய் திறந்து சிரிக்கும் அந்தச் சிரிப்பினை நினைவூட்டுகின்றன அம்மலர்கள், அழகு மட்டுமா? மதுவுண்ணும் வண்டுகளையெல்லாம் மயக்கிச் சாகவைக்கும் மணமும் பெற்று விளங்குகின்றன. ஆனால், என்ன பயன்? யாரேனும் அந்த மலர்களில் ஒன்றையேனும் எடுத்துச் சூடுகிறார்களா? சூடி மகிழ்கிறார்களா? இல்லையே! மலர்வதும், மலர்ந்த சில நாழிகைகளில் வாடி வதங்குவதுமே அவற்றின் வாழ்வாகி விட்டது! இயற்கையில் நிகழும் இந்தத் துன்பக் காட்சியைக் காணும் போது நம் நெஞ்சில் அவல உணர்ச்சி மட்டுமா, தோன்றுகின்றது? ஆழ்ந்த உண்மையும் புலனாகிறதல்லவா? ஆம்! உலக வாழ்க்கையில் எத்தனையோ பெருமக்கள் பிறக்கின்றார்கள்; ஆனால், ஒருவருக்கும் பயன்படாமல் செத்து மடிகின்றார்கள், அந்தப் பூக்களைப் போலத்தான்!

இயற்கையின் ஆணைக்குக் கட்டுப்பட்ட உலகில், எதற்கும் விதிவிலக்கு இல்லாமல் இல்லை. அதிகமான் வாழ்க்கையை நினைக்கும் போது அந்த உண்மை புலனாகின்றது.

வள்ளல் அதிகமானும், அருந்தமிழ்க் கிழவியாம் ஔவைப்பாட்டியும் ஆருயிர் நண்பர்கள். நட்பு