பக்கம்:உணர்வின் எல்லை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உணர்வின் எல்லை

35

‘இல்லா கியரோ காலை மாலை!
அல்லா கியர்யான் வாழு நாளே!
நடுகற் பீலி சூட்டி தாரரி
சிறுகலத் துகப்பவுங் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குடலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே!’

- புறம். 235

இப்பாட்டை ஒருமுறை அன்றிப் பலமுறை படிக்க வேண்டும். அதிகமானையும், ஒளவையாரையும், அவர் தம் உயரிய நட்பையும் நினைந்து நினைந்து. படிக்க வேண்டும். அப்போது நம் சிந்தனை விண் ணில், ‘உணர்வின் வித்து உடலை மறந்து, உள்ளத்தையும் மறந்து, உயிரையும் மறப்பதுதான்; உணர்வின் எல்லையோ உடலைத் துறந்து, உள்ளத்தையும் துறந்து, உயிரையும் துறப்பதுதான்’ என்ற கருத்து மின்னல் ஒன்று ஒளி வீசும்.