பக்கம்:உணர்வின் எல்லை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லவள்

39

வானில் தோன்றியுள்ள இக் குளிர்மதியம் என் அருமைத் தலைவியின் திருமுகந்தானே? என வியந்து காண்பான் போல, வெண்ணிலவின் இணையிலா அழகைத் தன் இருவிழிகளாலும் கண்டு களித்திருந்தான் தலைவன்; ஆனால், திடீரெனச் சலிப்புற்றவன் போலத் தன் தலைவியின் அன்பு முகத்தை நோக்கி, ‘கறையில்லா நின் முகத்திற்குக் கறைபடிந்த இம் மதியம் இணையோ?’ எனக் கூறி மகிழ்ந்தான். தலைவன் திருக்கரங்களில் தாமரைக் கொடிபோலக் கிடந்த தலைவி, ‘இயற்கை அழகினும், இன்பத் தமிழினும் இனியது ஒன்று உண்டு போலும்!’ என எண்ணி மயங்கியவளாய்க் கண் இமை மூடிக் கனவுலகில் ஆழ்ந்தாள்.

நள்ளிருள் வேளை; நடுப்பகலே எனும்படி வான்மதி ஒளிபரப்பல் ஆயிற்று; ‘பொழுது புலர்ந்ததோ! என எண்ணித் தருத்தோறும் தங்கியிருந்த புள்ளினம் ஆர்த்தன ; சிறகடித்துப் பறவையினம் செய்யும் ஒலி கேட்டனர் தலைவனும் தலைவியும். மையிருளும் கரைந்தது; புள்ளினத்தின் ஒலியரவமும் ஓங்கியது. அன்னை கனவு கண்டு எழுந்தாலும், 'ஐயன் விழித்தாலும்..............?’ என்று எண்ணி அஞ்சியவளாய், தலைவனைப் பிரிய மனமின்றிக் கண்கலங்கிப் பிரிய முயன்றாள் தலைவி. நெடுநேரம் தலைவியுடன் கொஞ்சி மகிழ்ந்து குலவிய இன்பமெல்லாம் நொடிப் பொழுதில் மறைந்தது போல ஆயிற்று தலைவனுக்கு. அவன் வீர மார்பு விம்மித் துடித்தது. அவ்வமயம் எதனாலோ முகிற்காட்டினுள் சுடர்மதியம் மறைதல்