பக்கம்:உணர்வின் எல்லை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii

முதல் முதலாகக் 'கட்டுரை' என்று எழுதியது; அச்சில் வெளி வந்ததும் அதுவே.

பதினாறாண்டு இளைஞனாய் யான் இருந்தபோது எழுதிய அக்கட்டுரையைக் கண்ணுற்றுக் கழிபேருவகையுடன் தன்னைப் பதிப்பாசிரியராய்க் கொண்டிருந்த அர்ச். சூசையப்பர் கல்லூரிக் கலைமலரில் கருணை கூர்ந்து வெளியிட்ட அருட்டிரு. எஸ். அருள்சாமி, S.J., அவர்கட்கு யான் என்றும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.

எனது அருமைத் தந்தையாரின் புன்முறுவல் பொதிந்த நல்வாழ்த்தோடும் பல்லாண்டுகளாய் எனக்கு உயர்நிலைப் பள்ளியில் அறிவு புகட்டிய ஆசிரியர்கள், அன்பு பாராட்டிய தோழர்கள் ஆகியோர் பாராட்டுதல்களோடும் தொடங்கிய எனது இலக்கிய முயற்சி கடந்த 17 ஆண்டுகளாய் வளர்ந்துள்ள வரலாற்றைக் காட்டுவதே ‘உணர்வின் எல்லை.’

பாரதியாரைப் பற்றிய (’பாரதியும்—பாரதியும்') கட்டுரை அப்பெருங்கவிஞரின் நினைவு நாளுக்குரிய செப்டம்பர்த் திங்களிலேயே வெளி வந்ததை எண்ணும் போது யான் அடையும் மகிழ்ச்சி பெரிது. மேலும் அவர் கலைமகளை வழிபட்ட வழிபாட்டின் கருத்தோவியமாகவே அமைந்துள்ள அக்கட்டுரை வெளிவந்த திங்களை ஒட்டியே கலைமகள் விழாவும் அமைவதை எண்ணும் போது இருமடங்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

‘பாரதியும் பாரதியும்’, எனது கல்லூரிப் படிப்பின் முதல் ஆண்டில் முகிழ்த்தது; ‘ஆருயிர் மருந்து’ எனது கல்லூரிப் படிப்பின் முடிவாண்டில் மலர்ந்தது.

ஏனைய பதினெட்டுக் கட்டுரைகளும் தலை சிறந்த தமிழ் இதழ்கள் பலவற்றிற்கும் அவ்வப்போது என்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்வின்_எல்லை.pdf/5&oldid=1373732" இலிருந்து மீள்விக்கப்பட்டது