பக்கம்:உணர்வின் எல்லை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

உணர்வின் எல்லை

அவை சொல்லாவோ, ‘அதோ உன் ஆவித் துணைவர்’ என்று சொல்லா!

‘ஓ! மலர் சொல்லாதுதான்! ஆனால், நான் தொட்டுத் தொட்டு மகிழ்ந்த அக்கூந்தலை — ‘தேர்வண் மலையன் தேன் சொரியும் மலர்க் காட்டின் மணம் போலும் நின் கூந்தல்’ என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்த அந்தக் கூந்தலை—சாந்திட்டுக் கோதிய தன் நறுங்கூந்தலை—யான் விடாது பற்றியிருந்த தன் அழகு கரத்தால் எண்ணெயிட்டுத் தடவுகிறாளே! அப்போதேனும் அந்தக் கையும் மனமும், ‘அதோ! உன் தலைவன்! பார்த்து மகிழ்!’ என்று ஆணையிடாவோ?........’

‘இடா’

‘இடாவா!....... என்ன வியப்பு! எங்கெங்கோ நோக்குகின்றாளே! ஆனால், என்னைக் காணவும்—கண்டு புன்முறுவல் செய்யவும் மறுக்கின்றாளே! ஏனோ ?’

‘ஏனா? அவள் தமிழ்ப்பெண்! உன் அருமைத் தலைவி!........... அதனாலேதான் ! ‘பெண்ணா—தலைவியா அவள்? இல்லை! இல்லை! பெரிய திருடி! நேற்றைய நள்ளிரவிலேதான் தனிமையில் கண்டேன்; அப்போதோ, நம்மவள்! ஆனால், நள்ளிரவு நீங்கிச் சிலமணி நேரமே சென்ற இவ்வைகறையிலோ—நாலுபேர் உள்ள தன் வீட்டிலோ யாரோ