பக்கம்:உணர்வின் எல்லை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லவன்

45

மொழியால் ஆளவாயினும் அவனால் முடிகிறதா! இது அவமானம் அல்லவா?’ என்றான்.

‘உண்மைதான்’ என்றேன் துயரத்தோடு.

‘உண்மை என்று சொல்லிவிட்டால் போதுமா? அதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டாவா?’ என்றான்.

நண்பன் முகத்தில் அப்போது .பொங்கிய உணர்ச்சி, அதற்குமுன் நான் அவனிடம் என்றும் கண்டிராத ஒன்றாய் இருந்தது.

‘ஆராயத்தான் வேண்டும்; இந்தக் கட்டுரையைப் படி’ என்றேன். நான் எழுதியிருந்ததை ஆர்வத்தோடு எடுத்தான்; படித்தான். “இரண்டறி கள்வி!” .‘என்ன அழகான சொற்றோடர்!யார் பாட்டப்பா இது?’ என்றான்.

‘கபிலர் பாட்டு-சங்கத்தமிழ்-குறுந்தொகை’ என்றேன்.

‘என்ன அழகான காதல் ஒவியம் ! எனன அருமையான பாட்டு!’ என்று போற்றினான்.

‘அருமையான பாட்டு மட்டும் அன்று! அறிவான பாட்டுங்கூட. அதோடு நீ கேட்ட கேள்விக்கு-ஆராயத் துடித்த ஆராய்ச்சிக்குப் பதிலும், முடிவும் கூறும் பழந்தமிழ்ப் பாட்டு’ என்றேன்.