பக்கம்:உணர்வின் எல்லை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன வீரம்!

51


ஆடிமாதம்; இருபுறமும் கனியுதிரும் சோலைகளைக் காடுபோல விரித்து, பால் நினைந்தூட்டும் தாயினைப் போலச் சாலப்பரிந்து சோழநாட்டை ஊட்டி வளர்க்கக் க் காவிரி அன்னை பாய்ந்து வருகிறாள்! இயற்கை அன்னையாம் அவளது கருணை வெள்ளம் பொங்கிவரும் அக் காட்சியினை, இரு மருங்கிலும் எள் விழவும் இடமின்றிப் பொன்னி வளநாட்டு மக்கள், சோலை வண்டுகள் என மொய்த்து நின்று, கண்ணாரக் கண்டு களிக்கின்றர்கள். அந்தக் காவிரி வெள்ளம், அடக்கலாகா வே க த் துட ன் பாய்ந்து வரும் அந்த இணையில்லாக் காட்சி, ஓர் இன்ப விருந்தேயன்றாே? ஆனால், அந்தப் பயன் நிறைந்த வெள்ளத்திலே எவ்வளவு பயனற்ற. நுரைத்திரள் படர்ந்திருக்கிறது!

***

திங்களில் களங்கம்; ரோஜாவில் முள் ; நீரில் நுரை; .... ஒருவகையில் இப்படித்தான் இருக்கிறது நம் தமிழகத்தின் பொற்காலம்-சங்க காலமுங் கூட. உலக வரலாற்றில் ஒப்புக் காணமுடியாத அவ்வளவு உயர்ந்த நாகரிக வாழ்வு வாழ்ந்தவர்களே சங்ககாலத் தமிழ் மக்கள். ஆயினும், அவர்கள் வாழ்விலும் நாகரிகத்திலும் சிற்சில குறைகள் இடம் பெறாமல் போகவில்லை. அவற்றுள் ஒன்றுதான் பரத்தைமையாகும். பரத்தையின் பொருட்டு உணர்விலும் பண்பிலும் சிறந்த தலைவியைப் பிரிதலை ஒருவகை ஒழுக்கமென - நாகரிகமெனக் - கருதினர் அக்காலத் தமிழருள் பலர் என்பது புலனாகிறது.