பக்கம்:உணர்வின் எல்லை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

iii

எழுதப் பெற்றவை. அவை தாம் வெளிவந்த கால முறைப்படியே பெரும்பாலும் இந்நூலில் அமைந்துள்ளன. அது பற்றிய பட்டியல் ஒன்றையும் தந்துள்ளேன்.

'உணர்வின் எல்லை'யில் 17 ஆண்டுகளாய் யான் எழு திய தனித்தனி இலக்கியக் கட்டுரைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இலக்கியத் துறையிலேயே ஒரு பொருள் பற்றியே தொடர்ச்சியாக யான் எழுதியவை தனித்தனி நூல்களாக உருப்பெற்றுள்ளன.

இக்கட்டுரைகள் நூல் வடிவம் பெறும் இந்நேரத்தில் எனது இலக்கிய முயற்சிகட்குப் பல்லாற்றானும் துணை புரிந்து வரும் பெருமைமிக்க இதழாசிரியர்கட்கும் பண்பு மிக்க இலக்கிய நண்பர்கட்கும் எனது நன்றியறிதலைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த பதினேழு ஆண்டுகளில் ஓர் எளிய கட்டுரைக் கலைஞன் என்ற முறையில் தமிழ் நாட்டின் தலைசிறந்த இதழ்கள் பலவற்றிலும் யான் வரைந்த இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுதியாகிய 'உணர்வின் எல்லை'யைத் தென்னாட்டின் தனிப் பெருவள்ளல் டாக்டர்-ராஜா-சர்-அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் திருவடிகட்குப் பணிவன்புடன் காணிக்கையாக்குவதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன். சென்னைப் பச்சையப்பர் கல்லூரி இடைக்கலை வகுப்பில் சிறப்புத் தமிழ் பயிலும் மாணவனாக யான் 1943ஆம் ஆண்டில் சேர்ந்த போது அண்ணாமலை அரசர் தம் அருள் நிறைந்த பொருட் கொடையே எனக்கு உதவி நிதியாய் அமைந்தது. சிறப்புத் தமிழ் பயிலும் கருதி 1941-ஆம் ஆண்டில் அரசர் நிறுவிய நிதியைப் பெறும் வாய்ப்பும் முதன்முதல் வாய்த்தது. அப்பொருளுதவியால் யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்வின்_எல்லை.pdf/6&oldid=1389007" இலிருந்து மீள்விக்கப்பட்டது