பக்கம்:உணர்வின் எல்லை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

உணர்வின் எல்லை


சிறப்பாக, செல்வச் செழுமை நிறைந்த மருத நிலத்தில், (வயலும் வயல் சார்ந்த இடமும்) இவ்வொழுக்கமும் நாகரிகமுமே ஏனையவற்றினும் கவர்ச்சி உடையதாகக் கருதப்பட்டது போல விளங்குகிறது. கட்குடியையும் வரைவின்மகளிர் தொடர்பையும் மிக வன்மையாகக் கண்டித்து அற நூல் இயற்றிய வள்ளுவப் பெருந்தகையார் ஒருவர் தவிர, மற்றைச் சங்ககாலப் புலவர் அனைவரும் தம் பாடல்களில் இத்தகைய மருதநில நாகரிகத்தையே--வரைவின் மகளிர் தொடர்பால் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் ஊடல் (சிறு பூசல்) ஒழுக்கத்தையே-அடிப்படையாகக் கொண்ட சுவை நிறைந்த பல கவிதைகளை இயற்றியிருப்பதை அகப் பொருள் தொடர்புடைய எட்டுத்தொகை நூல்களிற் காணலாம். அப்புலவர் பெருமக்கள், 'இலக்கியம், வாழ்க்கையின் ஆராய்ச்சியாகவே இருக்க வேண்டும்’, என்ற எண்ணத்தாலேயே இவ்வாறு பாடினர் ள் போலும்!

ஒருவன், ஒருத்தி-இருவரும் உயிரொடு உயிர் கலந்தாற் போன்ற அன்பு வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்களுடைய ஆரா அன்புடைய காதல் வாழ்வைக் கண்டு, வானத்து உரோகிணியும், வையத்து அன்றிலுங் கூடப் பொறாமைப்பட்டிருக்கும்!. அப்படி இணைபிரியா இன்ப வாழ்க்கை நடத்தி வந்த அவர்கள் வாழ்க்கையில் செல்வம் ஏராளமாகச் சேர்ந்தது; செழுமை பொங்கியது. வீட்டின்-மருத நிலத்தின்-தலைவன் அளவில்லாச் செருக்குக்