பக்கம்:உணர்வின் எல்லை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

உணர்வின் எல்லை


பரத்தையின் ஒற்றர்களால், மிகவிரைவில், அவள் காதுகளில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டன. கேட்டாள் பரத்தை! கிளர்சினம் கொண்டாள்! இயற்கைதானே! சாதாரணமாகவே இளநம்பியரைக் கூவியழைக்கும் தன் அழகின் மாட்சியால் கலையின் பெருமையால்-தலை நிமிர்ந்து நடக்க எக் காலத்தும் கூசாத அவள், பெருநிலக் கிழான். ஒருவன் தன் கலை ஒளிரும் மனையில்-தன் மலரடிகளில் மயங்கிக் கிடக்கும் இங்நிலையிலா இத்தகைய சுடுசொற்களைப் பொறுத்துக் கொள்ள விரும்புவாள்? ஒரு நாளும் விரும்பாள்! பொறுமை இழந்தாள் பரத்தை. அவள் திருவாய் மலரலாயிற்று.! அம் மலர்ச்சியில் பிறந்த சொற்கள் எவ்வளவு மணம் நிறைந்தவை! இரண்டாயிரம் ஆண்டுகளாகியும் அவற்றின் மணம் இன்றும் குன்றவில்லையே!

பரத்தை அஞ்சா நெஞ்சம் படைத்தவள்; பழுத்த உலகியல் அறிவு பெற்றவள்; காசினி முழுதும் தன் காலடியிலேதான் உள்ளது என்ற இறுமாப்பு எப்போதும் அவள்பால் உண்டு. மேலும், அவள் சாதாரணப் பரத்தை அல்லள்! அரசியல் அறிந்த பரத்தை! அப்புறம் கேட்கவா வேண்டும், அவள் ஆண்மைக்கும், ஆற்றலுக்கும்?

செல்வச் செருக்கால் களிவெறி கொண்ட தலைவனப் பிரிந்த தலைவி, 'ஆண்கள்தான் இப்படி என்றால் இந்தப் பெண்களுக்குமா அறிவு இல்லை.” என்று கூறினாள் என்பதை, மீண்டும் ஒரு முறை