பக்கம்:உணர்வின் எல்லை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன வீரம் !

55


நினைத்துப் பார்த்தாள் பரத்தை. அவளுக்கு ஆத்திரம் பொங்கியது; ஆண்மை வீறு கொண்டது. வீட்டுக்குள்ளேயே குடத்து விளக்குப்போல அடைபட்டுக் கிடக்கும் இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு தைரியம், இப்படி நம்மைக் குறித்துப் பேச! கோழை! வீட்டுக்குள்ளேயே இருந்து பேசுகிறாள்! தைரியமானவளாய் இருந்தால் வெளியில் வரட்டுமே! ஆற்றிலும் புது வெள்ளம் வந்திருக்கிறது; நானும் தலைவனும் சேர்ந்து புதுப் புனல் ஆடப்போகிறோம்; அப்போது வேண்டுமானல், இவள் தி ற மையும் துணிவும் உடையவளாயின், நேரில் வந்து தன் கணவனை அழைத்துச் செல்லட்டுமே! அந்தக் தைரியம் உண்டா இவளுக்கு?’ என்று இவ்வாறு தன் மனத்தில் பொங்கிய வேகத்தை எல்லாம் கூரிய சொல்லம்புகளாக்கித் தலைவியின்மேல் வீசினாள், குறிபார்த்து எய்யும் வேடனைப் போல அப்பரத்தை. தன்னைப் புறங்கூறிய தலைவியின் காதில் தவறாது சென்று சேரும்படி அச்சொல்லம்புகளை வீசினாள் அவள். தலைவியை மட்டும் அச்சொற்கணைகள் தாக்குதல் போதாது ; அவளைச் சார்ந்தோரையும் தாக்க வேண்டும் என்று, அவள் சுற்றத்தாரும் அறியுமாறு பேசலானாள் அவ்'வீர'மங்கை !

பாத்தை இவ்வாறு ஆத்திரங்கொண்டு, தலைவியும் அவள் சுற்றமும் அறிய முழங்கிய முழக்கத்தில், இன்னும் முக்கியமான ஒரு கருத்தையும் கூறி வைத்தாள். அல்லாவிட்டால், 'அரசியல் அறிந்த பரத்தை'யாகிய அவளுக்கும், மற்றைப் பரத்தையர்