பக்கம்:உணர்வின் எல்லை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன வீரம் !

57


மாகவே கூறினேன். அவனும் சிரித்தான். அதுவும் நான், 'அரசியல் தெரிந்த பரத்தையப்பா அவள்!' என்று சொல்லியபோது, அவன் எவ்வளவோ அடக்க முயன்றும் அடக்க முடியாது கொல்லென்று உரக்கச் சிரித்து விட்டான். சிறிது நேரம் சென்றதும்-சிரிப்பு அடங்கியதும்-'சுந்தரம், அந்த 'அரசியல் அறிந்த பரத்தை'யைப்பற்றிச் சங்க இலக்கியத்தில் எங்கேயப்பா சொல்லியிருக்கிறது? அந்தப் பாடலைச் சொல்; எழுதிக்கொள்கிறேன்; எங்காவது எதற்காவது பயன்படும்! என்றான்,

'கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கம் சேறும் ; தானஃ
தஞ்சுவ துடையள் ஆயின், வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனைஆன் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்க,தன் கொழுநன் மார்பே.

(குறுங் தொகை-80)

[கூந்தல்-எம் கூந்தற்கண், ஆம்பல் முழுநெறி அடைச்சி-ஆம்பலினது புறவிதழொடித்த முழுப் பூவைச் செருகி, புனல்-வெள்ளம், இருந்துறை-பெரிய நீர்த்துறை, சேறும்-செல்வோம்; தானஃது-- தலைவி அங்ஙனம் யாம் தலைவனுடன் விளையாடுவதை, நுகம்படக் கடக்கும்-பகைவரை நடுவுநிலையுண்டாகும்படி வஞ்சியாது எதிர் நின்று கொல்லும், முனை ஆன் பெருநிரை போல-போர்முனையிடத்தேயுள்ள பசுக்களின் பெரிய கூட்டம் போல, கிளையொடும் காக்க-சுற்றத்தோடும் வந்து பாதுகாப்பாளாக!]