பக்கம்:உணர்வின் எல்லை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7. பொருத்தமான உவமை

அன்று ஞாயிற்றுக்கிழமை; மாலை 5 மணி இருக்கும். எதிர் வீட்டு நண்பன் நம்பி, மெல்ல வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தான். அன்று அவன் முகத்தில் சிந்தனையும் சோர்வும் மாறி மாறித் தோன்றியவண்ணம் இருந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் அவனைக் காண நண்பன் செல்வமும் வந்து சேர்ந்தான். வந்தவனே வழக்கமான முக மலர்ச்சியோடு வரவேற்கவில்லை நம்பி ; எங்கேயோ சிந்தனேயைப் பறிகொடுத்திருந்தான். செல்வம் மெல்லத் திருவாயைத் திறந்தான்.

'என்ன நம்பி! என்ன சிந்தனை! அத்தை மகளிடமிருந்து கடிதம் ஒன்று...’ என்று இழுத்தான். சே! நீ ஒரு குறும்பன்!” என்றான் நம்பி, முகத்தைச் சுளித்துக்கொண்டே. -

'அடே! என்னப்பா அவ்வளவு கோபம்! சரி; வேறு என்னதான் செய்தி? ஏதாவது அரசியல் ஆராய்ச்சியோ? நீ தான் அ ர சி ய ல் பைத்தியமாயிற்றே!' என்றான், செல்வத்தின் கண்களில் துாண்டில் போட்டு மீனைத் தேடும் செம்படவன் பார்வை விளங்கியது.

‘உ.ம் அரசியல்! என்ன அரசியல் வேண்டியிருக்கிறது! பாழாய்ப்போன அரசியல்!' என்று