பக்கம்:உணர்வின் எல்லை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருத்தமான உவமை

61


அப்படித்தான் ஆகிவிட்டது இன்றைய அரசியல். பதவிகட்குப் போவதற்கு முன்னால், தலைவர்கள் மக்களிடம் வந்து சத்தியம் செய்கிறார்கள் ! உண்மையான தொண்டர்கள்-ஒழுக்கம் நிறைந்த நல்லோர்கள்-வீட்டு வாயிலில் காரை வைத்துக் கொண்டு அவர்கள் சொல்லை-உழைப்பைப் பயன் படுத்திக்கொள்ளக் காத்திருக்கிறர்கள்! ஆனால், பதவிக்கு வந்ததும்-அதிகாரத்தில் அமர்ந்ததும் எவ்வளவு நன்றி கெட்டவர்களாக நடந்துகொள்கிறார்கள் ! அப்பா! கொடுமை! மனித இதயமே இவர்கட்கு இல்லையா,' என்றான் நம்பி.

'மனிதனாவது! இதயமாவது! அவையெல்லாம் அரசியல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு புரியும் நோய்கள்! அரசியலுக்கு-அதுவும் கட்சி அரசியலுக்கு-மூளை-கொழுத்த மூளைதான் வேண்டுமே தவிர, இதயம்-கனிந்த இதயம் -எதற்கு? என்றான் செல்வம். .

'மூளை...... ! என்ன மூளை அப்பா அது...!” என்றான் சேர்வோடு நம்பி.

என்ன மூளையா? அதுதான் அரசியல் மூளை-டிப்ளமாட்டிக் ப்ரெயின்! ‘ என்றான் செல்வம்.

நாசமாய்ப் போக!’ என்று சபித்தான் நம்பி.

அடடா அதற்கு இன்னும் அரை நூற்றாண்டாவது பிடிக்குமப்பா!’ என்று வரம் கொடுத்துக்