பக்கம்:உணர்வின் எல்லை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

உணர்வின் எல்லை

 கொண்டே, இரு குவளைகளில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு உட்கார்ந்தேன். நீர் பருகியதும் நம்பி, என்னப்பா குறுங்தொகைப் பாட்டு.......? என்றான் அழுத்தமாக.

'என்ன ! உண்மையாகத்தான் கேட்கிறாயா ? சரி, சொல்கிறேன், என்று ஆரம்பித்தேன்;

***

இரு காதலர்-நல்லூழ் அவர்களைக் கூட்டி வைத்தது. ஒருவரோடு ஒருவர் உள்ளம் கலந்து பழகினர். அன்பும் நட்பும், பாலொடு தேன் கலந்தது போல அவர்கட்கு இனித்தன. இப்பிறப்பில் மட்டுமன்றி எப்பிறப்பிலும் இவ்வாறே இணைந்து வாழ்வோம்!' என்று அவர்கள் எத்தனேயோ முறை அல்லிக் குளத்தருகே நின்று சுடர் மதியம் சாட்சியாகச் சூள் உரைத்துக் கொண்டார்கள். நாளும் அவர்கள் நட்பு வளர் பிறை போல வளர்ந்து கொண்டு வந்தது. ஒரு வினாடி கூடப் பிரியாதிருக்க அவர்கள் உள்ளம் துடித்தது. ஆனால், அவ்வளவு எளிதில் ந ட க் கிற செயலா அது? அவர்கள் வாழ்க்கை ஒருவர் உள்ளத்தை மற்றவர் கவர்ந்து கொண்ட களவு வாழ்க்கையாகவே இருந்தது. இன்னும் அது கற்பு வாழ்க்கையாக மலர்ந்து மணம் வீச வில்லை. இந்நிலையில் அவர்கட்குப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வோர் ஆண்டாகத் தோன்றித் துன்புறுத்தியதில் வியப்பில்லை அல்லவா? ஆனால், அந்த நல்ல தலைவியின் மனத்துயர் குறையவும், வல்லமை படைத்த அந்தச் சிறந்த தலை