பக்கம்:உணர்வின் எல்லை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

உணர்வின் எல்லை


வீடே உலகமாகக் காண்பவன் அல்லன்; உலகையே வீடாகக் கருதும் அறிவும், பயிற்சியும் பெற்றவன்; 'கால்கொண்டு மண்ணில் நடக்கும் வாழ்க்கை திறம்பட அமைந்தாலொழிய, மனங் கொண்டுவிண்ணில்-கற்பனை உலகில்-பறக்கும் வாழ்வு அமையாது; அமைந்தாலும், நிலைக்காது,' என்பதைப் பரந்த உலகில் பலரோடும் பழகிய அறிவால் -ஆராய்ச்சியால்-அனுபவத்தால்-நன்கு அறிந்தவன். அவன், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, என்ற வள்ளுவர் மொழியை அறிந்தவன் மட்டுமல்லன்; ஆழ்ந்து உணர்ந்தும் தெளிந்தவன். தான் குடிபுகுந்து கவலையின்றி வாழ விரும்பிய காதல் மாளிகையைப் பலம் பொருந்திய பொருள் வளமாம் அடிப்படையின் மீது அவன் கட்ட விரும்பினான். 'வீட்டிலிருந்து பொருள்களைக் காத்து இல் வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும்பொருட்டே ஆகும்,! என்ற வள்ளுவர் வாய்மொழியையே தன் வாழ்வின் குறிக்கோளெனக் கொண்ட அவன், எவ்வாறு பொருளின் இன்றியமையாமையை உணராமல் இருக்க முடியும்?

எனவே, பொருள்மீது அவன் நாட்டம் சென்றது. இக்காலம் போன்றதன்று பழங்காலம்.

சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் அப்பனுக்குப் பிள்ளேயானுலும்-அவன் தன் கையால் உழைத்துத் தான் வாழ்வதிலேயே இன்பம் கண டான். அப்பன் தேடிவைத்த சொத்தாகிலும்,