பக்கம்:உணர்வின் எல்லை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

உணர்வின் எல்லை


நெஞ்சம் துணிய வில்லை. முதல்நாள் தொட்டு இன்று வரை தலைவியோடு தான் உறவு கொண்டு எல்லையில்லா இன்பம் துய்த்து வருவதற்குப் பேருதவி புரிந்து வரும் சான்றாண்மை மிக்க தோழியை நினைத்தான். 'ஆம்! அவளிடமே சென்று நம் கருத்தைக் கூறவேண்டும். அனுபவம் நிறைந்த அந்த அம்மைதான் நமக்குத் துணேபுரிய வல்லவள்-நம் உள்ளக் கருத்தைத் தக்க சமயம் அறிந்து தலைவியிடம் கூறி அவள் கலங்காது காக்க வல்லவள்' என்று எண்ணினான். தன் சிந்தனையில் இந்த எண்ணம் தோன்றியதும், ஒருவகையான பலம் அவன் உடலில் தோன்றியது; ஒருவகையான மகிழ்ச்சியும் தெளிவும் அவன் முகத்தில் விளங்கின; ஒரு வகையான நம்பிக்கை ஒளி அவன் கண்களில் வீசியது.

அவன் தோழியிடம் சென்றான்; தன் உள்ளக் கருத்தைப் புலப்படுத்தினான்; தன் நிலையையும், கடமையையும், நினைப்பையும் எடுத்துக் கூறினான். 'பொருள் தேடத்தான் போகிறேன்; கடமையை முடித்து விரைவில் வந்துவிடுவேன்; அன்பான தலைவிக்கு எவ்வாறாவது ஆறுதல் கூறி மகிழ்ந்திருக்கச் செய்ய வேண்டும்’ எனக்கேட்டுக்கொண்டான். ஆண்மை மிக்க தலைவனது பண்புடைமையையும் கடமை உணர்ச்சியையும் எண்ணி எண்ணித் தனக்குள் பூரிப்படைந்தாள் தோழி. ஆயினும், அவள் அறிவு, நிறைந்த அனுபவத்தில் தோய்ந்து சிறந்து விளங்குவது அன்றாே! எனவே, அவள்