பக்கம்:உணர்வின் எல்லை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருந்தமான உவமை

71

 சொற்கள் பிறக்கின்றன. அச்சொற்களை அப்படியே ஏட்டில் எழுதுகிறார் ஆ! என்ன அழகான கவிதையாய் அது உருக்கொள்கிறது! 'ஏழே அடிகள்! சுவை நிறைந்த ஒரு குறுந்தொகைப் பாடல்!'

இவ்வாறு என்னை மறந்து நான் பேசினேன். என் நண்பர்களும் தங்களை மறந்து கேட்டிருந்தார்கள். அவர்கள் மனங்கள் சங்க காலத்திற்கே போய் விட்டன. எங்கோ ஒரு தனி இடத்தில் தோழியிடம் நின்று கொண்டு தலைவன் பேசுவதும், அவனுக்கு அவள் அறிவுரை கூறுவதும், அக் காட்சியையும் குரலையும் அப்படியே ஒரு குறுக் தொகைப் பாட்டாக்கித் தலைசிறந்த அவ்வுணர்ச்சிக் கபிலர் பெருமான் சாகா வரம் தருவதும் கனவுலகத்தில் காண்பதுபோலக் கண்டுகொண்டிருந்தனர். ‘ஏழே அடிகள்! ஒரு குறுந்தொகைப் பாடல்!' என்றதும், நண்பன் நம்பி, எங்கே! அந்தப் பாடலைச் சொல் என்றான், ஆர்வத்தோடு. ஆமாம்! இசையோடும் சொல்’ என்றான் செல்வம், தலையை ஆட்டிக்கொண்டே.

'கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினையிடி யுண்ணும் பெருங்கல் நாட!
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந் தமையாய் ஆயின், மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்னஇவள்
ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே.'

(குறுந்தொகை, 225)