பக்கம்:உணர்வின் எல்லை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

உணர்வின் எல்லை


[பயமுலை மாந்த-பாலுள்ள முலை கு டி த் து நிற்க, முன்றில்-வீட்டின் முன்னிடம், பிடி-பெண் யானை, பெருங்கல்-பெரிய மலை, உவந்த உதவிபிறராற் பெற்று மகிழ்ந்த உதவியை, நன்றி மறந்து அமையாய் ஆயின்-நன்றி மறவாது திருமணம் புரிந்துகொள்வாயானால், கலிமயில் கலாவத்து அன்ன -ஆரவாரிக்கும் மயிலினது பீலியைப் போன்ற.]

என்னும் பாடலைச் சொன்னேன்-அல்ல-இசையோடு பாடினேன். கேட்டான் நம்பி. என்ன அருமையான பாடல் அப்பா அது கபிலர் பாட்டுத் தான் பாட்டு!” என்றான் உணர்ச்சியோடு.

'ஆமாம்! அந்தச் சங்க காலப் பெண்மணியின்தோழியின்-கூர்த்த அறிவைப் பார்த்தீர்களா ! தலைவனது நாட்டின் இயற்கையை - யானைகளின் செயலை - எடுத்துரைப்பதுபோலத் தன் உள்ளத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தும் அவள் நாகரிகத்தைப் பார்த்தீர்களா!' என்றேன். விளக்கத்தை விரும்புபவர்போல, நம்பியும் செல்வமும் என்னைப் பார்த்தனர்.

'அந்தப் பெண் யானைகள், தங்கள் கன்றுகள் மடியில் பால் குடித்துக்கொண்டிருக்கும்போதே, தினையைத் தின்கின்றன - இரண்டு காரணங்களால்; அவற்றுள் ஒன்று தங்கள் பசியைப் போக்கிக் கொள்வது; மற்றொன்று, தங்கள் கன்றுகளுக்குப் பால் தருவது. மேலும் மேலும் பால் பெருகவேண்டும் அல்லவா? அதுபோலப் பிரிந்து செல்லும் தலைவன் வரவை ஆவலோடு அவர்கள்