பக்கம்:உணர்வின் எல்லை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலமையும் கருணையும்

73


எதிர்நோக்கி இருக்கும்போது, இல்லற வாழ்வை வளமாக நடத்தவும், அருமைத் தலைவியை மணந்து கொள்ளவும் ஒருங்கே துணைபுரியும் பொருளைத் தலைவன் தேடி வர வேண்டும் என்பது குறிப்பு’ என்றேன்.

'ஒ! நுட்பமான அறிவுடையவள்தான் அத் தோழி என்றான் நம்பி,

அது போகட்டும். நீங்கள் எல்லாம் அரசியல்வாதிகள் ஆயிற்றே. இந்தப் பாட்டில் அரசியல் தொடர்போடு விளங்கும் ஒர் உண்மை-உவமைஉங்கட்குப் பிடிக்குமே!’ என்றேன்.

'நன்றி மறந்த மன்னன் போல’ என்று கூறுகிறாளே அதுதானே! என்றான் நம்பி.

ஆமாம். அரசியல், வாழ்க்கைக்குப் பயன் படக்கூடிய ஒரு நெறிதான்; ஆனால், எப்படியோ அதில் மாசும் தூசும் படிந்துவிடுகின்றன. தமிழ் மக்களின் பொற்காலம் என்று போற்றுகிறார்கள் சங்க காலத்தை. ஆனால், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கட்குக்கூட அரசியல் துறையில் இத்தகைய நன்றிகெட்ட பண்பினைச் சிற்சில சமயங்களிலேனும் பார்க்கும் வருந்தத் தக்க வாய்ப்பு இருந்தது போலும் என்றேன்.

'ஆமாம்! அதற்கு என்ன செய்யலாம்? என்றான் நம்பி, சற்றுச் சோர்வோடு.