பக்கம்:உணர்வின் எல்லை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

உணர்வின் எல்லை


'என்ன செய்ய முடியும்? எந்த ஒன்றிலும் முழு நன்மையும் இருப்பதில்லை; முழுத் தீமையும் அமைவதில்லை. அரசியலில்-அதுவும் கட்சி அரசியலில்-பெரும்பாலும் நன்மையைவிடத் தீமையே நிறைத்து காணப்படுகிறது. மேலும், போராட்டக் காலத்தில் இருப்பதைவிட, நிருவாகம் செலுத்தும் காலத்து அரசியலில் அறத்திற்குமான செயல்கள் மலிந்து விடுகின்றன. காந்தி அடிகளைப் போன்ற சான்றாேர்களின் கண்பார்வையும் கையசைப்பும் இருக்கும் வரைதான், அரசியலில் அறமணம் கமழ்ந்தது. அப்புறம் மணம் ஏது, ஒளி ஏது! கிரேக்கப் பெருஞானியார் ஒருவர் கனவு கண்டதுபோல, உலகினர் எல்லோரும் அறிவுடையோராகி, ஞானிகளால் தேசம் ஆளப்படும் நிலைமை வந்தால்தான் இக்குறை தீரும்', என்றேன்.

'ஆமாம்! உண்மைதான்! என்றான் நம்பி.

அதைக் கேட்ட செல்வம், 'உண்மைதான்; ஆனால், நான் சொன்னால் நீ நம்புவாயா?' என்றான் வெற்றிச் சிரிப்போடு.

‘அடேயப்பா! நீ எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி! என்று புன்முறுவலோடு கூறிக்கொண்டே, 'எங்கே இன்னும் ஒருமுறை அந்தப் பாட்டைக் கூறு; கேட்டுவிட்டுப் போகிறேன், என்றான் நம்பி. நானும் மகிழ்ச்சியோடு கபிலர் பாடிய அந்த அருமையான பாட்டை இசையோடு பாடினேன். கேட்டிருந்த நம்பி, என்ன அருமையான பாட்டு !