பக்கம்:உணர்வின் எல்லை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலமையும் கருணையும்

75


எவ்வளவு ஆழ்ந்த உணர்ச்சி எவ்வளவு அழகான தமிழ்!” என்றான் உணர்ச்சியோடு.

ஆமாம்! உணர்ச்சி-தமிழ்-எல்லாம் இருக்கட்டும். எவ்வளவு பொருத்தமான உவமை, பார்த்தாயா? அரசு கட்டில் ஏறிய மன்னன் நல்லோரை-அவர் செய்த நன்றியை-மறந்தாற்போல’ - எவ்வளவு அழகான உவமை!’

ஆம்! அறிவிற்கும், உணர்விற்கும், கருத்திற்கும், காலத்திற்கும் பொருத்தமான உவமை!’ என்று கூறி நகைத்தான் செல்வம். .

இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்திருந்த நான், ஒன்றும் தெரியாதவன் போல 'என்ன' பழந்தமிழ்ப் பாட்டில் உங்கள் இன்றைய அனுபவம் விளங்குகிறதோ?’ என்றேன். இருவரும் சிரித்துக்கொண்டே, எதிர் வீட்டை நோக்கி மெல்ல நகர்ந்தனர்.