பக்கம்:உணர்வின் எல்லை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

உணர்வின் எல்லை

[புதலின் அல்லல்-புறாவுற்ற துன்பம், இடுக்கண் - துன்பம், புலன்-அறிவு, அழாஅல்--அழுகை, புன்றலைச் சிறார்-சிறிய தலையையுடைய சிறுபிள்ளைகள், விருந்திற்புன்கண்-புதியதொரு வருத்தம்.]

இவ்வாறு கருணை ஊற்றாய் விளங்கிய அவன் குடிப் பெருமையை - மாவண் தோன்றலான மலையமான் புலவரின் புன்கண் தீர்த்த பெரியோனென்ற மாட்சியை-கரவற்ற நெஞ்சுடைய கள்ளமற்ற குழந்தைகளின் கலங்கிய பார்வையையெல்லாம் கோவேந்தன் நினைந்து நினைந்து உருகுமாறுஅவன் கொண்டிருந்த தன்னலப் பேயுணர்வு தருக்கிழந்து ஒழியுமாறு-சான்றோராகிய கோவூர் கிழார் எடுத்துச் சாற்றினார்; கடலலைகள் போலத் தம் நெஞ்சத்தில் பொங்கிவந்த ஆத்திரத்தை எல்லாம் அடக்கிக்கொண்டு நயனும் பயனும் அமையப் பேசினார். பாகாய்த் தம் உள்ளம் உருகிய உருக்கமெல்லாம் பார்வேந்தன் கொடு மனத்திலும் பாயுமாறு-பாய்ந்து பயன் அளிக்குமாறு-நல்ல தமிழின் வல்லமையெல்லாம் விளங்க உரைத்தார்; அம்மட்டோ !

'ஒழுக்கம் முடையார்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்.'

என்று வான்மறை தந்த தமிழ்ப்பெரியார் உணர்ந்து கூறிய பொன்மொழிக்கு இலக்கியமாய் விளங்கும்-அறமணம் கமழும்-சொற்களையே ஆத்திரமூட்டும் நேரத்திலும் சொன்னார்; கருணைக் கடவுளின் அழகு கோயில்களாய் விளங்கும் அக்