பக்கம்:உணர்வின் எல்லை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. தமிழ் நாடகக்கலை

உலக மொழிகள் பலவற்றிற்கும் இல்லாத எத்தனையோ சிறப்புக்களைக் கொண்டது நம் இன்பத் தமிழ். அச்சிறப்புக்களுள் எல்லாம் தலைமை சான்று விளங்குவது இயல், இசை, நாடகம் என்ற மூன்று பெரும்பிரிவுகளைக் கொண்ட தாய் விளங்குதலே ஆகும். அதனாலன்றோ தித்திக்கும் தமிழை, ‘முத்தமிழ்’ என்றே நம் முன்னோர் போற்றிப் புகழ்ந்து, நாளும் வளர்த்து வந்தனர்! ‘தெரிமாண மும்மைத் தமிழ்’ என்று பழந்தமிழ் இலக்கியமாகிய பரிபாடல் போற்றும் இம் முத்தமிழில் ஒன்றாகிய ‘நாடகத் தமிழ்’ தோன்றிய காலம் இதுவென அறுதியிட்டு உரைப்பதும் அரிதாய் உள்ளது. ‘தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களாலும்’ தொடக்கம் காண முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாய்த் திகழும் நாடகத் தமிழ் பற்றிய பழைமையான குறிப்புக்கள் போதிய அளவிற்கு இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இயல், இசை, நாடகத் தமிழின் அழியாப் பெருங்கருவூலமாய் விளங்கும் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய பெரியாராகிய அடியார்க்கு நல்லார், 'இனி இசைத் தமிழ் நூலாகிய பெருதாரை பெருங்குருகும், பிறவும், தேவ விருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீயம் முதலாயுள்ள தொன்னூல்களும் இறந்தன. நாடகத் தமிழ் நூலாகிய பரதம்,