பக்கம்:உணர்வின் எல்லை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடகக்கலை

83

அகத்தியம் முதலாயுள்ள தொன்னூல்களும் இறந்தன; பின்னும் முறுவல், சயந்தம், குண நூல், செயிற்றியம் என்பனவற்றுள் ஒரு சார்ச் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது, முதல் நடு இறுதி காணாமையின், அவையும் இறந்தன போலும்!’ என்று கூறியுள்ளார். இந் நூல்களுள் சிலவற்றின் பெயர்களை உற்று நோக்கும் போது, அழிந்து போன இவற்றினும் சிறந்தனவும் பழையனவுமாகிய தனித் தமிழ் நாடக நூல்கள் இருந்து மறைந்திருக்க வேண்டுமென்று ஆராய்ச்சியாளர்கள் எண்ண இடம் ஏற்படுகிறது.

....

....

...

பழைமை மிக்க தமிழ் நாடகக் கலை பற்றிய வரலாற்றை நாம் தெரிந்து கொள்வதற்குரிய பெருஞ்சாதனமாய் இன்று விளங்குவது இளங்கோ அடிகள் செய்தருளிய சிலப்பதிகாரமே ஆகும். தமிழ் நாடகக் கலை, முறையாக வளர்ந்த வரலாற்றை அறிவதற்குரிய நல்வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். எனினும், நாடகக்கலை தமிழகத்தில் இடையீடின்றி வளர்ச்சிபெற்றே வந்தது என்பதை நிறுவுதற்கான சான்றுகள் பல, இலக்கிய நூல்களிலும், இடைக் காலச் சோழர்கள் கல்வெட்டுக்கள் வாயிலாக நாடகக் கலையின் வரலாற்றை ஆராய்ந்த காலஞ் சென்ற பேராசிரியர். ச. க. கோவிந்தசாமிப் பிள்ளை போன்ற நற்றமிழ் அறிஞர்கள் தெரிவித்துள்ள குறிப்புக்களிலும் சுவையும் பயனும் நிறைந்தனவாகக் காணப்படுகின்றன. அவர்தம் ஆராய்ச்சியின்படி