பக்கம்:உணர்வின் எல்லை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடகக்கலை

85

என்ற மதுரைக்காஞ்சி அடிகளில் காணலாகும். நாடக மகளிர் ஆடுகளம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை பேசுகின்றது. இக்குறிப்புக்களைப் போன்று வேறு பல செய்திகளையும் தன்னகத்தே கொண்டுள்ள சங்கத் தமிழ் இலக்கியம், கிறிஸ்து பிறந்த சில நூற்றாண்டுகட்கு முன்னும் பின்னும் தமிழ் நாடகக்கலை நம் தாயகத்தில் பெற்றிருந்த வளர்ச்சியினையும் வாழ்வினையும் விளக்கிக் காட்டுகின்றது. பல பழந்தமிழ் நாடக நூல்கள் அடியார்க்கு நல்லார் காலத்திலேயே இறந்துப்பட்டன் என்ற உண்மையை அவர் வாக்காலேயே சற்று முன் கண்டோம். அடியார்க்கு நல்லார் காலத்தில் வாழ்வு பெற்றிருந்ததாகத் தெரிகின்ற பரத சேனாதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்ற இரு பெரு நூல்களும் அவருக்குப் பின் அழிந்து போயின. பரிதிமாற்கலைஞர் தம் நாடக இயலின் முகவுரையில் கூறியாங்கு, கூத்த நூல், நூல் என்னும் நாடகத் தமிழ் நூல்களும் காலவெள்ளத்திற்கு இரையாயின.

பழந்தமிழ் நாட்டில் கதை தழுவிவரும் இசையை நாடகமென்றும், பிறவற்றையெல்லாம் கூத்து என்றுமே குறிப்பிட்டனர் என்பது தெரிகிறது. மேலே சுட்டிக்காட்டிய நூல்கள் பலவும் நாடகம் பற்றிய இலக்கண நூல்களே.

சிலப்பதிகாரத்தில், தமிழ் நாடகக் கலை பற்றிய பல்வேறு செய்திகள் இடம் பெற்றுள்ளன. நெஞ்சையள்ளும் அக்காவியத்தில் மிகச் சிறந்ததொரு பாத்திரமாகக் காட்சி அளிக்கும் மாதவி நல்-