பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு இ.இ சொல்வேட்டை, புலி வேட்டை போன்றது. பரஸ்பர வேட்டை, புலிமுகம் புதர் மறைவில், நிலாவில் பூமியில் விழுந்திருக்கும் இலைக்கோல நீழலில் தெரிந்தும் தெரியாத அநிச்சியத்தில் ஒன்றன்மேல் ஒன்று பாயக்காத்திருக்கும் எது முன் எது பின்; எதை எது வேட்டை? எனும் தருண நெருக்கடியில் வேட்டைக்கும், வேட்டையாடுபவனுக்கும் இடையே காணும் உறவு-இந்த உறவின் த்ரில் சொல்லுக்கும் எழுத்தாளனுக்கும் இடை உறவு பற்றிச் G&srā, ść spor. The hunter & the hunted #3tu (Essgår. En Gair நீ உன்னில் நான் என்னில் நீ. இந்த ஐக்கிய பாவத்தை -இதன் அகண்ட இனங்காணாத சோகத்தை, அதேசமயத் தில் உவகையை, காதல் உணர்வை அனுபவித்தவர்தான் அடையாளம் கண்டுகொள்ள முடியும். சொல்லைத் தேடு கிறேன் என்று சொல்வதைக் காட்டிலும் தொடர்கிறேன் என்பதே பொருந்தும். வாய்ச்சொல்லுக்கும் எழுத்துக்கும் ஒரு வித்யாசம். எழுதிக்கொண்டே போகையில் எழுத்தாளனின் உள் விருக்கும் மோன சக்தி, கூடவே அவன் எழுதும் எழுத் துக்குத் துணைவருகிறது. மோனத்தின் தவத்தனிமையின் பலம் சொல்லுக்கு ஊறுகிறது. சொல்லின் யோகதண்டத் தின்மேல் சாய்ந்தபடி, மனம் தவப்படுகையில் அதோ சொல் ஜபிக்கும் விஷயத்தின் கோபுர முனைப்பு-அதோ அவ்வப் போது தெரிகிறது: