பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} லா, ச. ராமாமிருதம் திரும்பத் திரும்பக் கதையென்றும் கவிதையென்றும் கட் டுரையென்றும் ஞானம், விஞ்ஞானம், சாஸ்திரங்கள் என்றும் அடிப்படையாகவோ நுட்பமாகவோ நமக்குக் கிடைக்கும் இலக்கிய தரிசனங்கள் images & imageries =:$3$5fraầy. வாழ்க்கையிலேயே ஒரு வாழ்வு மற்றொன்றுக்குச் சின்னம். creative processஇல் நேரும் இந்த அமுதத் திவலைகளை, சொற்கள் செளந்தர்யத்தின் மரபுக்குச் சேமிக்கின்றன. சொற்களே மரபின் சேமிப்பு. நாளடைவில் எழுத்து சாதகத்தில் எனக்கு ஒன்று புலனாயிற்று-புலனானபோது புதிது: சொற்களுள், சொற் களிடையில் மறைந்திருக்கும் இசை மேலெழுந்தவாரியாகத் தெரியும் வேறும் ஒசையின்பம் மட்டுமல்ல-இதை விளக்குவதே எனக்கு மிகவும் கடினமாயிருக்கிறது. ஆனால் சந்தோஷமாயிருக்கிறது. கட்செவியெனும் உட்செவிக்கு மட்டும் எட்டும் ஒரு இழைபாடு algebra வில் homogeneous expression என்று உண்டு. அதுபோன்றும் சொற்களி னிடையே ஓசை வெளிப்படாத ஒரு இசைக்கோர்வை. அந்தர இசை-இனிமேல் வார்த்தைகளுக்குத் திணறுகிறேன். அண்மையில் வானொலியில் பாலமுரளி கிருஷ்ணா ஒரு மாணவிக்குப் பாட்டு சொல்லிக் கொடுப்பதாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. "மாமவ பட்டாபிராம எனும் மனிரங்கு" ராகக் கீர்த்தனை ஸாஹித்யத்தில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பதத்தை ஸ்வரப்படுத்திக் காட்டினார். அது ஒன்றும் புதிதல்லவாயினும் அந்த சமயத்தில் என் மனோநிலையில் வித்வானின் கன சாரீரத்தில் அந்த இடம் வெகு அற்புதமாக இருந்தது. சொற்களும் ஸ்வரங்கள்தானே! ஸ்வரம் என்பது என்ன? ஓசையின் வெவ்வேறு உச்சங்கள். சொற்கள், அந்த ஓசை உச்சங்களின் விதவிதமான ஏற்பாடான சேர்க்கைகள்