பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு 9 : (இந்த முறையில்) சொற்களைக் காண, அனுசரிக்க எனக்கு இந்தப் பாகுபாடு என்னை அறியாமலே ஏற்கனவே சொன்ன மாதிரி, நாளடைவில் ஊறிவிட்டது. ஒலியின் உருவே எழுத்தாகும். சொற்களை எழுத்தில் பிடிக்கும் போது அவைகளின் ஒலிச்சக்தியுடன் பிடிக்க வேண்டாமா? -த்வனி,..... ஒரு சிருஷ்டி உருவாகிக் கொண்டிருக்கையில் இந்திச் சொல்லை இப்படி அமைக்கலாமா? வாக்கியத்தில் ஆரம்பத் தில் வைக்கலாமா? அல்லது இடையில் பதிக்கலாமா அல்லது கடையில் அதற்கு இடங்காணலாமா? அந்தந்த இடத்தில் ஓசை எப்படிப் ப்ரதிபலிக்கிறது, இதனால் பொருள் எந்த அளவுக்கு நலுங்குகிறது, அல்லது அறவே மாறுகிறது, அல்ல, மிகைப்படுகிறது. இவைகளின் எதிரொலி, எதிரொலிகள் எவ்வளவு தூரம் -கம்ஸனின் லதா 19ர்வதா கிருஷ்ணத்தியாணம் போல் இதே நினைப்பு. இதே ஸ்மரிப்பு இதே பயம் என்கிற முறையில் இதே ஒரு பலமுமாகி, சொல்லுக்கு ஒரு மந்தர உச்சாடன சக்தி ஏற்படுகிறது என்பது என் அனுபவம்: ஒன்றும் வேண்டாம். நினைத்ததையே நினைத்துக் கோண்டிருந்தாலேயே ஒரு உருவேற்றம், சொல்லே மந்திர மடா என்று பாரதி சும்மாவா சொன்னான்? ஊஞ்சல் சங்கிலியின் தனித்தனி கொக்கிகள் போலும், ஒது வாக்கியத்தின் அமைப்புக்குக் காரணமாயிருக்கும் அதன் பதங்கள் அடுத்தடுத்து ஒன்றிலொன்று புதைந்து இறுக்கம் கண்டு அதன் பொருள் முகத்திலேயே வெடிப்பது போன்ற ஒரு effect உண்டாக்க முடியும்.