பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சனை 97 நான் ஏற்பாடாய்க் கிளம்பியபோது அப்படி ஒன்றும் தேரமாகிவிடவில்லை. கிராமத்தில் பெரிய வீட்டை ஞாபகப்படுத்துகிற மாதிரி, ஒட்டுக் கூரையிட்டு, கேரளாவின் கோயில் கட்டடப் பாங்கு எனக்கு எப்பவுமே பிடிக்கும். எப்பவும் இதுவரை எத்தனைமுறை இந்தப் பக்கம்? இந்தப் பக்கமும் இருபது வருடங்களுக்கு முன்னால் வந்ததுதான். ஆனால் நினைப்புக்குக் கடிவாளமுண்டா? சென்னை யில், அம்பத்துாரில், என் அறையில், ஜன்னலோரம் சிமிட்டி மேடையில் படுத்தபடி, வெளியே, மரமாய் வளர்ந்துவிட்ட செம்பருத்திச் செடியில், எட்டா உயரத்திலிருந்து எள்ளும் பூக்களைப் பார்த்துக்கொண்டு. இருபது வருடங்களுக்குமுன் என் நீண்ட பிரயாணத்தை எத்தனை முறையானாலும் நினைவுகூட்டி மகிழ, அசைபோட ஏங்க...நினைப்புக்குக் கடிவாளமுண்டா? இதழ்கள் புலுபுலு விரிதல் போலும் மலரும் பொழுதில் ஆண்களும் கெண்டிரும் நீராடி கூந்தல் ஈரம் இன்னும் உலராமல் கோடாலிமுடிச்சில், வெள்ளையுடுத்து, சுறுசுறுப் பாகக் கோயிலில் வளைய வருவதைக் கான நெஞ்சை அள்ளுகிறது. தன் சுழிப்போடு, கூட்டம் என்னை இழுத்துத் தள்ளித் கொண்டுபோய் இசைகேடாய்ப் பக்கவாட்டில் தள்ளி என்னைத் தன்னிடமிருந்து உதறிவிட்டது. எங்கோ பிரிந்து போனேன். அதனாலேயும் பரவாயில்லை. இரவு மயக்கம் இன்னும் முழுக்கத் தெளியவில்லை. நடந்துகொண்டே துரங்கும் பருவத்திலிருக்கிறேன். என் வட்டம் முடிந்து உ.-7