பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சனை ஒ9 'கண்ணா, எப்போடா வீட்டுக்குத் திரும்பப் போறோம்?" என்னைக் கவலையோடு நோக்கினான். "என்னப்பா திடீர்னு?’’ எனக்கும்தான் புரியவில்லை. நாடே, ஒரு முடிவிலாத, நீண்ட கொன்டர்-எண்ணங்கள், நம்பிக்கைகளுக்கும்கூடஆகிவிட்டதை நினைக்கும்போது திகைப்பாய் இருக்கிறது. கனவு அற்ற துக்கமோ கிடையாது. கனவுகள் இழந்த வாழ்க்கையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? பயமாயிருக்கிறது. கோவிலை விட்டு வெளியே வந்தபோது வெய்யில் மஞ்ச ளாகிவிட்டது. தங்கியிருக்கும் வீட்டுக்கு ஏதேனும் வாங்கிப் போலாமே! ஓரமாக நடந்து சென்று வடக்கு மதிலுக்குத் திரும்பினேன். இங்கே கூட்டம் சற்று தணிவு. மதி.லோரமாக ஒருவன், ஜாதிக்காய்ப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு, அதன்மேல் வாழையிலையில் மல்லிப் பூ விற்றுக்கொண்டிருந்தான். இன்னும் தொடுத்துக்கொண் டிருந்தான். எதிரே போய் நின்றேன். "நூறு ரூபாய்.” "உன் கணக்குப் பிடிபடல்லே. பட்டணத்தில் முழத்தில் தான்...”* "ஒ. பட்டணத்திலிருந்து வாரீங்களா? அப்டின்னா இது முக்கால் முழம் தேறும். ஆனால் வயல்காடில்லே ஆளுங்க குரல் கொடுத்துக்கற மாதிரி, எட்ட எட்டக் கட்டி அங்கே முழம் பண்ணிடறாங்களே, அப்படியில்லே இது என்ன அடர்த்தியாயிருக்குது பார்த்தீங்களா?’ துரத்தைத் தூக்கிக் காட்டினான்.