பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆醇母 லா, ச. ராமாமிருதம் 'அப்பா நான் ஊருக்குப் புதுசு எப்படியிருந்தாலும் நீ கேக்கற விலையைத்தான் கொடுக்கப்போறேன். ஆனால் உன் விலை சூடாத்தான் படுது...' என்று இழுத்தேன். "என்ன செய்யறதுங்க. இப்போ பண்ணினாத்தானே உண்டு நாளைக்குத் தேருங்க. அப்படியும் பூக்கட்டி என்ன சம்பரிச்சுட முடியும்?" இரண்டு முழம் வாங்கினேன். ஐந்து ரூபாய் நோட்டுக்கு மிதி சில்லரை கொடுத்தான். 'ஏம்பா, அரை ரூபாய் கூடக் கொடுத்துட்டே போல இருக்கே!” புன்னகை புரிந்தான். "ஆமானுங்க, நீங்க ஊருக்கும். போனால் , எங்களைப்பத்தி நல்லபடியா நினைக்க வேணாமா?" இவனுக்கு என் நினைப்பிலேயே இடம்பிடிக்க வேனுமாம். தான்மட்டும் இல்லை, திருநெல்வேலிக்கும். சேர்த்து, இவனும் மேடையை ஞாபகப்படுத்துகிறான். ஏக்கம் அலை மோதிற்று. சமாளித்துக்கொண்டு, சற்று எட்டத் தள்ளுவண்டியில் வாழைப்பழம், விலை பேசி ஒரு சிப்பு வாங்கிக்கொண்டேன். பணம் கொடுக்க, மடியில் பர்ஸுக்குத் துழாவினால்ஆமாம், பர்ஸ்?-எங்கே? பதறிப்போய், இடுப்பில் எட்டுத் தடவை தடவித்தடளி, வாழைப்பழ வண்டிக்கும் பூ வாங்கின இடத்துக்கும் இடையே. துரத்தைப் பத்துத் தடவை நடத்து என்னையே தட்டா மாலை சுற்றினால் கிடைத்துவிடுமா? ஐயைய்யோ, நாளைக்கு மதுரைக்கு டிக்கட்டும் என் முழுப்பணமும் அதிலே, தான். இப்போ என் முழி நிச்சயம் திருட்டு முழி, திகில் முழி.