பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சனை # (; ; இருந்தாற்போல் இருந்து என் காதண்டை ஒரு குரல். 'பர்ஸ்தானே? அதோ அங்கே ஒரு பெண் பிள்ளையும் பையனும் நிக்கறாங்களே!-கட்டிக்காட்ட மாட்டேன்வெற்றிலை கூடைக்காரியோடு பேரம் பேசறாங்களே! அதான் ஸ்ார், பையன் கிஷ்ணாயில் காலனோடு நிக்கறான், அம்மா கையிலே ப்ளாஸ்டிக் கூடை தொங்குது-அவங்ககிட்ட உங்கள் பர்ஸ் இருக்குது, போய்க் கேட்டு வாங்கிக்கங்க...' அவ்வளவுதான். நேரே போய் மதில்மேல் சாய்ந்தபடி நின்றுகொண்டு, நெருப்புக் குச்சியால் பல் குத்த ஆரம்பித்து விட்டான். இவன் எனக்கு ஒத்தாசைக்கு வரமாட்டான். ஆமாம், தான் ஏன் வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டும்? இடம் காட்டினதே பெரிசு. என்னென்று கேட்பேன்? ஏன் அப்படிச் செய்தேன் என்றும் தெரியவில்லை. நேரே அவளிடம் போய் இரு கை களையும் சேர்த்து ஏந்தினேன். என்னை ஏற இறங்கப் பார்த்தாள். ஒன்றுமே பேச வில்லை. கூடையை அடைத்த முளைக்கீரைக் கட்டு அடியி லிருந்து எடுத்துக் கொடுத்தாள். அடுத்தது என் செய்கை அதுவும் புரியவில்லை. மடியி லிருந்து வாழையிலைக் கிழிசலில் பொட்டலத்தை எடுத்து நீட்டினேன். வாங்கிப் பிரித்துப் பூவை எடுத்துக் கொண்டையில் சொருகிக்கொண்டாள். அவள் கண்களில் ஃப்ளாஷ்! உடனே மறைந்தது.