பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சு. செல்லப்பா 認05 அவரோடு நான் தங்கின மூன்று நாட்களுக்கும் அன்புக்குக் குறைச்சலே இல்லை. என் தாயார் உயிரோடு இருந்தபோது என் வீட்டில் என் மனம் எப்படி ஒருவிதமான விடுதலையி லிருந்ததோ, அப்படியிருந்தேன். உபசரிப்பென்றால் உதட்டு உபசாரமில்லை. சிலபேர் மிகைபட ஒழுகுவார்கள். மேலே கவ்விக்கொள்வார்கள். "'இதோ பாருங்கள் ராமாமிருதம், நான் கவனித்தேன். எப்பவுமே ரஸ்ம் உங்களுக்குப் பிரியம்போலத் தெரிகிறது. ஏந்திக் குடிக்கிறீர்கள். அது உடம்புக்கு நல்லதல்ல. சாதத் துடன் கலந்து சாப்பிடுங்கள். ஒன்றும் பண்ணாது.” இதனால்தான் தாயார்மாதிரி என்றேன். நான் போயிருந்த சமயம், கண்ணுக்கு ரண சிகிச்சை ஆகி, இன்னும் மருந்திலிருந்தார். சிக்கலான சிகிச்சை என்று அறிந்தேன். மதுரையில் புகழ்பெற்ற கண் ஆஸ்பத்திரி (பேர் சமயத்துக்கு நினைவு வரவில்லை. இது ஒரு சாபம்) டாக்டர்கள், சிப்பந்திகள் தன்னைக் கவனித்துக்கொண்ட முறைபற்றி உற்சாகத்துடன் புகழ்ந்து பேசினார் சாயங்காலம் பையன் (ஒரே மகன்) ஆபீஸிலிருந்து வந்தான். விசுப்பலகையில் படு கவைத்து ("சும்மா படு அப்பா எனக்கு எப்படிப் போடணும்னு தெரியும். படு என்கிறேனே!') கண்ணில் சொட்டு மருந்தை ஊற்றினான். பையனின் உரிமையான அதட்டலும், அவர் அதற்குப் பணிந்துபோகும் பாங்கும் பார்க்க இன்பமாயிருந்தது. செல்லப்பா வீட்டைப் படுசுத்தமாய் வைத்திருந்தார். (இதில் வீட்டுப் பெண்டிருக்கு அதிகப் பங்கு கொடுக்க எனக்குத் தோன்றவில்லை) செல்லப்பாவின் கைதான் எனக்கு தெரிந்தது. முக்கியமாகத் தோட்டத்தில்- ஏனோதானோ