பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சு. செல்லப்பா # 09 "'என்னய்யா இது, இந்தமாதிரி தெருவில் நடந்தால் ஆபத்து இல்லையா?” அதட்டல் கேட்டு உலகுக்கு மீண்டால் என் வழியில் செல்லப்பா நின்றுகொண்டிருந்தார், கையில் அவர் பை யுடன் முகத்தில் சிரிப்பு இல்லை. தெருவில் என் அஜாக்ர தைக்குக் கோபம் தானிருக்கும். ஒரு நிமிஷம் பொறுத்து சுதேசமித்ரன் வார இதழில் உங்கள் கதை-இதழ்கள் (பார்கவி, படித்தேன். ரொம்ப நன்றாக இருக்கிறது. ஒரு அப்பு அழுக்குக் கிடையாது. Perfect Endingஇல் வைத்திருக்கும் முத்தாய்ப்பு பிரமாதம். யார் இப்படிச் சொல்வது? செல்லப்பாவா? வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷியா? இல்லை, சிற்பம் சிரக்கம்பம் செய்கிறது. . எனக்கு வாயடைத்துப்போய்க் கண் கலங்கிவிட்டது. ஒ, செல்லப்பா எதிரில் உணர்ச்சிவசப்படுவதில் எனக்கு வெட்கம் கிடையாது, அவரைவிட நான் ஐந்து, ஆறு வயது இளையவன்தான். செல்லப்பா, கனிவுடன்-"என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நல்ல பண்டம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டேயிருக்கிறோம். கிடைத்தால் சந்தோஷம் எங்களுக்குத்தான் அதிகம்.’’ உங்களைவிட இந்த நாளில் இப்படி யாரேனும் சொல்வார்களா? மணிக்கொடி எழுத்தாளர்களின் விசேஷம் அதுதான். அதிலும் செல்லப்பா. மேலும், 'உங்கள் கதையை சுதேசமித்ரன் வார இதழில் விமர்சனம் செய்யலாம் என்றிருக்கிறேன்." ஏதேது, கொண்டைபோட்டு, மயில் ரக்கை சூட்டல் வேறா? அங்குமிங்கும்ாக, துணுக்காக, ஒரு வரி இரு வரியாக, தினசரி பேப்பரிலோ, வாசகர் கடிதங்களிலோ, பாராட்டு.