பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 லா. ச. ராமாமிருதம் வந்தால் அதை ஃப்ரேம் போடி வழியிருக்கிறதா என்று யோசிக்கும் நாள் அது தொடர்ந்து அந்த ஒரு கதையை மூன்று வாரங்கள் விமர்சனம் என் கதையைப் படிப்பதைக் காட்டிலும் என்னைப் பற்றிப் படிக்க என்ன ருசி! செல்லப்பாவின் அலசல் விமர்சனம் என்றால் என்னென்று நினைக்கிறீர்கள்? வரிக்கு வரி check past. தப்பான யூகத்துக்கு இடந்தரக்கூடாது என்கிற கவலையில் விவரமான விளக்கங்களில் எடுத்துக்காட்டுகளில் அவருடைய தமிழ் நடையே மாறிவிட்டது என்பது என் கருத்து, என் கதை அமைந்திருந்த மனோதத்து ரீதியும் அதன் விளம்பகால அசைவும் (movement) அவருடைய அலசல் விமர்சனத்துக்கு ஈடுகொடுத்தன. அவருக்கும் புகுந்து விளையாட செளகரியமாயிருந்தது என்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பத்திரிகையில் நான்" எனும் என் சொல் சித்திரம் வந்து ப்ரகாசம் அடைந்தது. அதில் ஒரு வாக்கம்: "நெருப்பு என்றால் வாய் வேக வேண்டும்" உ(அதாவது சொல்லுக்கும் செயலுக்கும் இடைக்கோடு அழியும் இலையை எழுத்தில் சாதிக்க வேண்டும் எனும் என் ஆசையைக் குறிக்கிறது) இப்பவும் பாராட்டாகவோ, ஏளனமாகவோ, வியப்பிலோ, இலக்கிய வரலாறு, விமர்சனக் கட்டுரைகள், நூல்களில் என் பெயர் வருகையில்-இந்த வாக்யம் குறிப்பிடப்படுகிறது. செல்லப்பா பிடிவாத குணம் படைத்தவர். இதற்கு ருசு வேறெங்கும் தேட வேண்டாம் பத்துவருடங்கள் எழுத்துப் பத்திரிகையை நடத்தினாரே அது போதாதா? பொழுது போக்கு அம்சம் ஏதுமில்லாமல் முழுக்கவே விமர்சனத்துக் கென்றே ஆன பத்திரிகை. இதனுடைய வெற்றி நிச்சயம் வியாபார ரீதியில் இல்லை. முழுப்பொழுதை எழுத்தாக்கிக்