பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சு. செல்லப்பா # 1 i கொண்டவனுக்கு தினமும் சோதனையான அந்நாளில் (இப்போது மட்டும் என்ன வாழ்ந்தது?) செல்லப்பா , எப்படி உங்களால் சாத்தியமாகிறது" என்று கேட்க முடியுமா? அவ்வளவு துணிச்சல் எனக்கேது? அது என் சொந்த விஷயம். இலக்கியம் பேச வந்தீர்களா, வம்பு பேச வந்திர்களா?’ என்று கேட்டுவிட்டால்? கேட்பாரோ மாட்டாரோ, செல்லப்பாவிடம் அந்த அத்து எனக்கு எப்ப வும் உண்டு. நாக்குத் துடித்ததுடன் சரி.

  • எழுத்து வின் வெற்றி வேறுவிதத்தில், விமர்சனத்தின் அந்தஸ்தை அது எடுத்துக்காட்டிற்று.

புதுக்கவிதை இயக்கத்துக்குத் தொட்டில் என்கிற முறையில் எழுத்து என்றும் பேசப்படும். செல்லப்பா லட்சியவாதி. அவருக்கு அது போதும். இல்லை, அதுகூட அவருக்கு அவசியமில்லை. தனக்குச் சரி. இல்லை, தன் மனச் சாட்சிக்குச் சரியென்று பட்ட ஒரு காரியத்தில் ஈடுபட்டோம் என்கிற திருப்தி போதும். பிடிவாதம், வீம்பு-அரிச்சந்திரனிலிருந்து காந்தி வரை, ராமபிரானிலிருந்து துரியோதனன்வரை பீஷ்மனிலிருந்து செல்லப்பா வரை நான் பூஜிக்கும் குணங்கள். இந்தக் குணங் களால் என்றுமே லாபம் இல்லை. நன்மைக.ட இல்லை. ஆயினும் அவை குணங்கள். அவையில்லாவிட்டால், முதுகெலும்பே இல்லை oேmpromise செல்லப்பாவின் அகராதியிலே கிடையாது. விமர்சனம் என்பது-இல்லை, விமர்சனத்தைப் பற்றி நான் எண்ணுவதை இடமும் நேரமும் கிடைத்தால் பின்னால் எழுதுகிறேன். உண்மையான விமர்சகனின் தகுதி கன் என்னென்று எனக்குத் தெரியும்.