பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五互豪 லர் ச. ராமாமிருதம் அவனுடைய ரசிகர் வட்டம் குறுகல்தான் மிக்கக் குறுகல். ஆனால் அதனுள் அவன் ஒரு "க்ளாமரை” அனுபவித்தான். இப்பவும்தான் சினிமா நடிக நடிகையர் எத்தனை விளம்பரம் அனுபவித்தாலும், அவர்களுக்கும் எழுதிப் பிரபலமடையத் தனி ஆசை. ஏனோ தெரியவில்லை. நான் எழுத்தாளன். ஆனால் பிச்சமூர்த்தி எனக்கு "ஸ்டார். பிச்சமூர்த்தியின் எழுத்துக்குத்தான் நான் முதலில் பரிச்சயமானேன். அப்போதுதான் நான், எழுத்துலகில் அடி வைத்திருந்த காலம் என் நிலை, சின்னக் குழந்தை தட்டுத் தடுமாறி, தடுக்கி விழுந்து எழுந்து, நடை பழகு வதுபோல. அப்போது, இன்னும் புத்தக உருவில் வராது, ஒன்றை நான்காக மடித்த 'ரோஸ் டின்ட்பேப்பரில் ஒருநாள் அவர் கதை கண்டேன். கதைத் தலைப்பு 'வெண்கலப் பானை" கதை ஞாபகமில்லை. ஐம்பது வருஷ சமாச்சாரம் பேசுகிறேன். - இப்பவே சொல்லிவிடுகிறேன். இங்கே நீங்கள் காது, தெல்லாம் அனேகமாக முப்பது நாற்பது வருஷ சமாச்சாரங்கள்தான் . ஆனால் மல்லனுக்கு மல்லன், கைகலக்கு முன்னர், கண் ணோட்டத்திலேயே, எதிரி பலம் உணர்வதுபோல, அந்தச் சொல் அழுத்தமும், தன்னம்பிக்கையும், கதையில் ஏற்றி விருக்கும் மன தீர்க்கமும் Concentration-galargaஇந்த உன்னதத்துக்கெதிர் நான் எந்த மூலை; உண்,ை யிலேயே ஒடுங்கிப்போனேன். அப்போது எழுத்துலகில் எனக்கு ஆதரவு, தைரியம், அடைக்கலம் எல்லாமே தி.ஜ.ர.தான். "எனக்குப் பிச்சமூர்த்தி மாதிரி எழுத வருமா, லார்?" என் குரலின் தீனம், இப்போது லேசான சிரிப்புடன் நினைவு வருகிறது.