பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 லா. ச. ராமாமிருதம் கச்சிதம், ரத்னச் சுருக்கம். பேசி நிறுத்தியதும், இன்னும் கொஞ்சம் சொல்லமாட்டாரா எனும் ஆசை தூண்டம் பட்டுத் தவிக்கும். "ராஜகோபாலா!' (கு.ப.ரா.வை முழுப் பெயர் சொல்லி அவர்தான் அழைத்துப் பார்த்தேன்!) "செல்லப்பா!' "சிட்டி!" "ராமையா !” குரலில் லேசான நடுக்கம், என்ன கனிவு அப்பவே என் ஆசை என்னை அப்படி எப்போது அழைப்பார் என்று எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் அந்தப் பேறு எனக்குக் கடைசிவரை கிட்டவில்லை. "வாங்கோ, டோங்கோ’ என்று தான் விளித்தார். பன்முறை ஆக்ஷேபித் தும் பார்த்துவிட்டேன். இத்தனைக்கும் நான் பதினைந்து வயதேனும் சிறியவன். சரி, என்ன அந்தக் கூட்டத்தில் பேசினார்? இலக்கியம், வசனம் , கவிதை, விமர்சனம் எல்லாம்தான் என் நல் அதிர்ஷ்டம், எனக்கு அவருடைய :ரந்த வீச்சு இல்லா விட்டாலும் என் தகப்பனார் எனக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்திருந்த முறையில் எனக்கு அந்த பாஷையில் ருசி ஏற்பட்டு, மேனாட்டு இலக்கியத்துடன் அந்த வயதிலேயே கணிசமான புழக்கம் இருந்தமையால் அவருடைய விவாதங் களையும் விவாத நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு ரவிக் கவும் முடிந்தது. அதனால் என் திருஷ்டி விரிவடைந்து பயனும் அடைந்தது. மேற்கண்ட விவரங்கள், பொதுவாகப் பிச்சமூர்த்தி, பேச மனமில்லாதவர். தன் தந்தக் கோபுரத்தைவிட்டு: இறங்காதவர் என்கிற தப்பு அபிப்பிராயம் தந்தால், அது.