பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந. பிச்சமூர்த்தி | f 9 என் துர்ப்பாக்கியமே. அவர் கோபுரமே கொண்டாடிய தில்லை. பேச்சு கச்சடாவாக இருக்காதே தவிர, கலகலப் பானவர்தான். சகஜமாகப் பழகும் தன்மையுடையவர். அவருடைய சான்னித்யம் எனக்கு அவரைச் சுற்றிக் கயிறு கட்டினால், அதற்கு அவர் என்ன செய்வார்? பிச்சமூர்த்தியின் எழுத்தும் அவருடைய பேச்சுப் போலத் தான். படாடோபம், படபடப்பு, அலங்காரங்கள் இல்லாமல் நறுக்குத் தெறித்த நடை. செறிந்த உலக அனுபவத்தில் தோய்ந்து, அதிலேயே விளைந்து, விஷயத்திற்கு அழுத்தம் தரும் உவமைகள். பின்னோக்கில் இன்னொரு சிறப்பும் அவர் பாணியில் படுகிறது. இன்னமும் படிக்க மறு பக்கத்தைத் திருப்பினால், ஆச்சர்யம், அங்கு ஒன்றும் இருக்காது. ஏனெனில், முந்திய பக்கத்திலேயே முடிந்துவிட்டது. ஏன் இப்படி கதை முழுமை அடையாமல் ஏமாற்றிவிட்டதா? அப்படி எண்ணினால் தவறு விளக்கப்புகின் , எனக்குத் தோன்றுவதைச் சொல்லுகிறேன்-படித்து முடித்தபின்னரும் விஷயத்தின் உயிர்மூச்சு படித்தவன் நெஞ்சில் மிதப்பலாடு கிறது. அதாவது என்னதான் நீ கதையாகவும், நாவலாகவும்: கவிதையாகவும், காவியமாகவும் எழுதித் தள்ளினாலும், ஓவியமாகத் தீட்டினாலும், தத்துவமாகப் பேசித் தள்ளி னாலும், வாழ்க்கைநூலின் மறுநுனி காணவே முடியாத நூல் கண்டு என்கிற உணர்வு நினைவில் இடறிக்கொண்டேயிருக் கிறது. இதை ஒரு அபூர்வ சாதனையாகவே கருதவேண்டும்The endless continuous mystery and mysticism of life— அவரைக் கொடியின் இயல்பு ஓயாத, முடிவற்ற படர்ச்சி. வாழ்க்கை ஒரு சட்டையுரிப்பு என்று பிச்சமூர்த்தி அடிக்கடி சொல்வார். இது ஒன்றும் புதிதல்ல, வெங்காயத் தோல் தத்துவம்தான் என்றாலும், அனுபவத்தின் முத்திரை யுடன் அவரிடமிருந்து வெளிப்படும்போது, அழுந்தத்தான் கவனம், அவர் பேச்சை வாங்கிக்கொண்டது.