பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏易爵 லா, ச. ராமாமிருதம் கலைமகளில் ஒரு குறுநாவல் எழுதியிருந்தார். குறு நாவல் என்பதைவிட, நீண்ட கதை. அதில் இரவு வேளை யில் இயற்கையின் வருணனை வருகிறது. இரவின் இருளில் இரவின் ஓசைகளுடன், நட்சத்திரங்களுடன் உவமைகளை வாரியிறைத்து, இரவே நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. அப்பப்ப! என் ப்ரமிப்பை அவரிடம் தெரிவித்துக்கொள்ள முயன்றபோது, (எப்படி எழுதினர்கள்?) அவர் அதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட்டார். 'என்னமோ வந்தது எழுதிவிட்டேன்." அப்படியானால், இவர் அடித்துத் திருத்துவதில்லையா? இடங்களைத் திருப்பி எழுதுவதில்லை. Fair Copy என்பதே இல்லையா? மேற்கூறியவையெல்லாம் இன்னமும் என் அவஸ்தைகள். ஆனால், எங்கள் இடையில் வயது வித்தியா சத்தில், ஏற்கெனவே நான் வகுத்துக்கொண்டுவிட்ட வேறு வித்தியாசங்களில், என் கேள்விகளை அவரிடம் எப்படிக் கேட்பேன்? @ongs?iors...1%. Jauff: “Creative urge, energy so மாறும்போது, செலவாகிவிட வேண்டுமென்பதுதான். அதன் ஒரே வேதனை, ஒரே அவஸ்தை, ஒரே function. கடலில் உருவாகித் திரண்டுவிட்ட அலை, கரையில் மோதி உடைந்து பரவித்தானே ஆகவேண்டும், அதனால் வேறு என்னதான் முடியும்?' அவரை நாங்கள் ஏகமாக மதித் தோம். ஆனால், அவர் தன்னைப்பற்றி என்னதான் எண்ணிக்கொண்டிருந்தார்: கடைசிவரை புதிர். அவரிடம் போலி அமரிக்கையில்லை. அமரிக்கைகூட இல்லை. அவர் சுபாவமே தன்னைப்பற்றி நினைத்துக்கொள்ளாததுதான். அதுபோன்ற விஷயத்துக்குச் சிந்தனையைத் தந்ததாகத் தெரியவில்லை. எப்படி ஒரு ைமு. த் த | ள ை ல் , தன் சிந்தனையே இல்லாமல் இருக்க முடிந்தது? முதலில் இது சாத்தியமா?