பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந. பிச்சமூர்த்தி 121 இல்லை. அவருக்குத் தன்னைப்பற்றித் தெரியும். வெளிக் காண்பித்துக் கொள்ளவில்லை. என் எழுத்தைக்கூட நேரிடையாக என்னிடம் அபிப்பிராயம் தெரிவித்ததில்லை. கண்களை மலர விழித்துக்கொண்டு, என் தோளைத் தொட்டு, ராமாமிருதம், உங்களுக்குத் தெரியுமா? என் வீட்டில் என் கதைகளை வி. உங்களுடைய கதைகள்தான் அவர்களுக்குப் பிடிக்கும்.' நான் மகிழ்ந்துபோய்விடவில்லை. கொஞ்சம் எரிச்ச லாகத்தான் வந்தது. இந்த ரிஷி என்னைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை... புதுக்கவிதை பற்றிப் பேச்சு வந்தது. 'புதுக்கவிதையை ஒரு movement-ஆ ஆக்கணும்னு செல்லப்பா ரொம்பப் பாடுபடுகிறான். அதில் என் பங்கைப் பெரிசாக்கிக் கொண்டாடறான், புதுசா ஒண்ணைப் புகட்டற துன்னா Public இடம் அவ்வளவு சுருக்க சாத்யமா? people have to be educated first before they cari appreciated a thing" பேச்சில் விரக்தி தொனித்தது. அவருடன் விவாதிக்கவோ, அவருக்கு ஆறுதல் சொல் லவோ, எந்தவிதத்தில் நான் தகுதி வாளாகிவிட்டேன். ஆனால், செல்லப்பாவின் முயற்சி வீணாகவில்லை. புதுக் கவிதைப் பரம்பரையே உருவாகிவிட்டதை முற்றிலும் கானப் புதுக்கவிதையின் பிதாமகர் இருந்தார் என்று சொல்லமுடியாது. அவருடைய மூத்த பெண், அல்ல, அடுத்தவளா. அறியேன். வாய்ப்பாட்டுப் பயின்று கச்சேரி அந்தஸ்துக்கு வந்து, அவளும் அவள் தங்கையும் உடன் பாட சில கச்சேரிகள் கூட நடைபெற்றன. ஆனால் மேடையில் நன்கு ஊன்றிக்கொள்ளுமுன், கலியாணம் கூடிவிட்டது,