பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந. பிச்சமூர்த்தி 1 2 3 அந்தச் சமயத்துக்கு ஏற்படுத்தும் ஒரு ஆறுதல், உற்சாகம் தீவிரம்-இதுவே செளந்தர்ய உபாசனைதான். பொழுதை ஒரு உயர்ந்த தடத்தில் கழிக்க, அதற்கே பேறு வேண்டும். உத்யோக ரீதியில் இடமாற்றம் என்னைக் கிட் த்தட்ட நாட்டின் தென்கோடிக்குத் தள்ளிற்று. நானும் அவரும் இது வரை இருந்த அளவுக்குக்கூடச் சந்திக்க முடியாமல் போய் விட்டது. அவரைக் கடைசியாகச் சந்தித்தது சிதம்பர சுப்ரஹ் மணியனின் ஸஷ்டியப்த முகூர்த்தத்தில். சொற்பகாலத்துள் எப்படி இந்த மூப்பு? அப்பவும் அழகன்தான். 'கும்பகோணத்துக்கே போயிடலாமான்னு பாக்கறேன். இங்கேயிருந்து என்ன பண்றேன்?’’ குரலில் சலிப்புத் தெரிந்தது. ஆனால் கும்பகோணம் போகவில்லை. நோய்வாய்ப் பட்டு சொன்னையில் ஆஸ்பத்திரியில் காலமான செய்தி யைத் தினமணியில் படித்தேன். வருத்தம், துக்கம்? தனியாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒன்று-கலைஞன், தன் கலை மூலம், மக்களின் இரத்தி ஒட்டத்திலே, அவர்கள் அறியாமலே கலந்து விடுகிறான். மனிதனே மனிதனின் அமுதகலசம், பிச்சமூர்த்தியைப் பற்றி என் பார்வையில் சாயம். தோய்ந்திருக்கிறதல்லவா? ஆனால் அதுபற்றி எனக்கு ரோசமில்லை பிச்சமூர்த்தி கெட்டிச்சாயம்.