பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந. சிதம்பர சுப்பிரமணியம் 1 37 அம்மாவுக்கும் வயதாகவில்லை. வசதியான குடும்பம். நிறைய நிலபுலன் (மன்னார்குடிப் பக்கம்?) சொத்து இருக்கும்போல் தெரிகிறது. ஒரே பையன் சி. ஏ வுக்குப் படித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு குறை. கலியாணமாகி நாளாகிறது. இன்னும் புத்ரப்சாப்தி வில்லை. (இதுபற்றிச் சிதம்பர சுப்பிரமணியம் பின்னால் என் னிடம் தமிாஷாக: "அம்மா அவசரப்பட்டுவிட்டாள். கொஞ்சம் பொறுத்திருந்தால் அந்தக் கவலையைப் பட்டிருக்க வேண்டாம்: ) -நான் இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். என்னைவிடப் பெரியவன் கலியாணமாகி இன்னும் படித்துக் கொண்டிருக்கும் செளகரியம்-புரியவில்லை. புழுக்கம்தான் தெரிகிறது. முதல் சிறுகதை சில மாதங்களுக்குப் பிறகு இன்னொரு சித்தப்பாவுக்கு - அவர் ஜாகை, திருவல்லிக்கேணி-இடம் மாறினேன். அவருடைய கண்காணிப்பில் வேலை சுருக்கக் கிடைக்கலாம் என்று பெரியவர்களின் முடிவு, அங்கேயும் வேலைவாய்ப்பு நிலைமை மாறிவிடவில்லை. ஆனால், வேறு வாய்ப்புகள் தாமாகவே முளைத்தன. எதிர் வீட்டில் கல்லூரி மாணவன் சகவாசம் கிடைத்தது. அவன் வீட்டில் உத்தமமான புத்தகங்கள், சஞ்சிகைகள் படிக்க முடிந்தது. என் இலக்கியப் ப்ரக்ஞை விரிவடைந்தது. ரஸனை மெருகேறிற்று. அறிவுபூர்வமான சம்பாஷணையில், சர்ச்சையில், விசாரங்களில் திளைத்தேன்.