பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 32 லா, ச. ராமாமிருதம் "நீங்கள் வாஹனியில்தானே இருக்கிறீர்கள், அப்போ அது சோடைவா?’ என்று முனகினேன். 'இதோ பாருங்கள் ராமாமிருதம், என் காரணங்கள் சூழ்நிலை வேறு. B.N.-உம் நானும் காலேஜில் ஒரு வகுப்பில் இருந்தோம். "சும்மாத்தானே இருக்கே, வாயேன்" என்று அழைத்தான் தவிர, பெரியவர்கள் வைத்துவிட்டுப் போயி ருக்கிறார்கள் என்று நானும் சும்மா இருக்கலாமா? நம்மு. டைய சமூகத்தின் set-பpஇல், உத்தியோகம் கெளரவச் சின்னம் மட்டுமல்ல, வயிற்றுப் பிழைப்பே அதுதான ப்யா!' அவர் புத்திமதியைக் கேட்டேனோ, பிழைத்தேன். அவருடைய அந்திய நாள்களில் அவருக்குக் காலம் சரியாயில்லை. பல சோதனைகள் நடுவில் உடம்புக்கு வந்து விட்டது. கேள்விப்பட்டு அவர் வீட்டுக்குப் போனேன், மாமி ஏதோ மென்று விழுங்கினாளே ஒழிய, அவர் உடல் நிலையைச் சரியாகச் சொல்லவில்லை. ஆனால், நான் தெரிந்துகொண்டது அவருக்கு 'ஸ்ட்ரோக்' 'நடாைடறார், தன் காரிகத்தைத் தானே பார்த்துக்கறார், ஆனால்-' ஆனால் பேச்சு சரியாக வரவில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள் இல்லை. ஆனால் அனேகமாக ஜாடைதான் காட்டினார் கண்கள்சற்றுச் சிறியவை தான்-அசாதாரணமாகப் பேசின. பள பளத்தன. எனக்கு அவர் நிலைமை கெடுபிடியாகத் தோன்ற வில்லை. ஆனால், நான் பார்த்து வந்த ஒரு மாதத்துக்குள், ஒரு நாள் காலை 'ஹிந்து'வை நடுப்பக்கத்தில் பிரித் அவருடிை மரணச் செய்திதான் கண்ணில் முதன் முதல் ஆட்டது, கொஞ்சம் அதிர்ச்சிதான் உடனே:ே மனதில் ஒரு வாக்கியம் தோன்றிற்று. - 'சாவே, கர்வம் கொள்ள தே. சுவடுகள் அழியலாம். ஆனான் , ரேகைகளை அழிக்க முடியாது.